இதன் ஒரு பகுதியாக தஞ்சை மமக-வின் சார்பில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி மது, மதுக்கடைகளுக்கு எதிராக தொடங்கிய பரப்புரை யுத்தம் டிச.30 அன்று கண்டியூரில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவுக்கு வந்தது.
துண்டு பிரசுர விநியோகம், சுவரொட்டிகள், வாகன பரப்புரைகள், வீதி முனை கூட்டங்கள், மது எதிர்ப்பு முழக்கங்கள், குறுந்தகடு பரப்புரை என பல வியூகங்களோடு புறப்பட்ட மமக வினர் தஞ்சை மாவட்டம் திருவையாறு ஒன்றியம் சார்பாக திறுவையாறு, நடுக்கடை, முஹம்மது பந்தர், கண்டியூர், மேல திருப்பூந்துருத்தி ஆகிய இடங்களில் பரப்புரைகளை நிகழ்த்தி 2000 மக்களின் கவனத்தை ஈர்த்தது.
வீதி முனை கூட்டங்களில் சகோ.சிவகாசி முஸ்தபா, சகோ.ஜெ.கலந்தர் ஆகியோர் சிறப்பாக உரையாற்றியதோடு மட்டுமல்லாமல் ஆர்ப்பாட்டத்துக்கும் அழைப்புவிடுத்தனர்.
டிச.30 அன்று பரப்புரை யுத்தத்தின் உச்ச கட்டமாக கண்டியூரில் 2-டாஸ்மாக் கடைகள் உள்ள பகுதியில் 150க்கும் மேற்ப்பட்ட மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் தஞ்சை மாவட்ட அமைப்புக்குழுவை சேர்ந்த சகோ. முஹம்மது ஹாரிஸ் தலைமையேற்க, முஹம்மது பந்தர் கிளை பொருப்பாளர் சகோ.முஹம்மது முஸ்தபா முன்னிலை வகித்தார், மமகவின் மாநில அமைப்புச் செயலாளர் சகோ. ராவுத்தர்ஷா அவர்களும், காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தோழர். செல்வ இலக்கிய ராஜா அவர்களும் கண்டன உரை நிகழ்தினார்கள்.
இறுதியாக துபை மண்டல முன்னாள் மருத்துவ அணிச் செயலாளர் சகோ. அப்துல் ரவூப் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.
கட்சியின் இதர கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
மேலும் புகைப்படங்கள் விரைவில் அப்டேட் செய்யப்படும்...








0 comments:
கருத்துரையிடுக