29-03-2015 அன்று காலை நடுக்கடை பஸ் நிறுத்தம் முன்பு, முஹம்மது பந்தர் கிளை தமுமுக சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
இதில் தமுமுக தஞ்சை (தெ) மாவட்ட செயலாளர் சகோ.தஞ்சை பாதுஷா, முகம்மது பந்தர் கிளை நிர்வாகிகள் சகோ.முஸ்தபா,சகோ.சித்திக், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வகிகள் மற்றும் யூனியன் சிட்டி ரியல் எஸ்டேட்டின் நிர்வாக இயக்குனர் சகோ.ஜாபர் பாய், திருப்பந்துருத்தி சகோ.அஜீஸ் பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை:
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சென்னை அலுவலகம் மீது சமூக விரோதிகள் சிலர் இன்று அதிகாலை வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திய செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் இந்த செயலை செய்த மனிதகுல விரோதிகள் உடனடியாக கைது செய்யப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி ஊழியர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்திய நிலையில் இரண்டாவது சம்பவமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது ஊடகத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்ல, தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட அப்பட்டமான மிரட்டல் மிகுந்த சவாலாகும்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? யாருடைய தூண்டுதலின் பேரில் இது நடக்கிறது? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
ஊடக தனித்தன்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு தமிழக அரசு தனது உறுதி வாய்ந்த நடவடிக்கை மூலம் பயங்கரவாத பிற்போக்கு சக்திகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம் இது.
தமிழக அரசு ஊடக தனித்தன்மையையும் சட்டம் ஒழுங்கையும் போர்க்கால அடிப்படையில் பராமரித்து தமிழகத்தில் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்தில் இருந்து ஊடகங்களையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
ஜே.எஸ்.ரிபாயீ
தலைவர், தமுமுக
இன்ஷா அல்லாஹ் தஞ்சாவூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 119 வது ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி சிறக்க துவா செய்யவும். மற்றும் கழக உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்.
இப்படிக்கு
தஞ்சை பாதுஷா
மாவட்ட தலைவர்,
தஞ்சை தெற்கு மாவட்டம்.
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்...) இன்ஷா அல்லாஹ் இன்று 12-07-2014 மாலை 5.30-மணிக்கு தஞ்சையில் தமுமுக-வின் இப்தார் நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர் : முனைவர். டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல் .ஏ அவர்கள். இடம் : விசிரிகார தெரு பள்ளிவாசல் - கீழவாசல், தஞ்சாவூர். வாய்ப்புள்ள அனைவரும் வருக...
தஞ்சை(தெ) பட்டுக்கோட்டையில் 21-06-2014 அன்று தமுமுகவின் 112-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக முடிந்தது.
புகைப்படங்கள்...
இலங்கையில் சிங்கள இனவெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. வன்முறையாளர்களை கண்டித்தும், இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்கக் கோரியும் மதுக்கூர் நகர தமுமுக சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 18/06/2014 புதன்கிழமை மாலை 5:15 மணியளவில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர் ஃபவாஸ் அவர்கள் தலைமை ஏற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் நாச்சிக்குளம் தாஜுதீன்,மாவட்ட செயலாளர் அதிரை அகமது ஹாஜா,மாவட்ட துணைச்செயலாளர் E.S.M. ராசிக்,மதுக்கூர் முன்னாள் செயலாளர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமுமுக தலைமைக்கழக பேச்சாளர் சகோதரர் பழனி M.I.பாரூக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.முடிவில் அமீரக யு.ஏ.இ.தமுமுக மதுக்கூர் பொறுப்பாளர் சகோதரர் ராவுத்தர்ஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் சிங்கள இனவெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. வன்முறையாளர்களை கண்டித்தும், இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்கக் கோரியும் தமுமுக சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தமுமுகவின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இப்போராட்டத்தில் தமுமுக மாநிலச் செயலாளர்கள் பேரா. ஜெ.ஹாஜாகனி, மீரான் மைதீன், மனிதநேய வர்த்தக சங்க துணைச் செயலாளர் சீனிமுகம்மது, தமுமுக தென்சென்னை மாவட்டத் தலைவர் கோரி முகம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும், மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அதிபர் ராஜ பக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இராமநாதபும் சட்டமன்ற உறுப்பினர் பேரா.ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து 4 ஸ்கூட்டி மற்றும் 66 மிதிவண்டிகளையும் மாற்றுத்திரனாளிகளுக்கு வழங்கப்பட்டது.