அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

வியாழன், 19 ஜூன், 2014

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள்: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்

இலங்கையில் சிங்கள இனவெறியர்களால், முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. வன்முறையாளர்களை கண்டித்தும், இவற்றைத் தடுக்கத் தவறிய சிங்கள ராஜபக்சே அரசைச் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நீதி வழங்கக் கோரியும் தமுமுக சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தமுமுகவின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இப்போராட்டத்தில் தமுமுக மாநிலச் செயலாளர்கள் பேரா. ஜெ.ஹாஜாகனி, மீரான் மைதீன், மனிதநேய வர்த்தக சங்க துணைச் செயலாளர் சீனிமுகம்மது, தமுமுக தென்சென்னை மாவட்டத் தலைவர் கோரி முகம்மது, வடசென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான் அலி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்துகொண்டனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும், மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இலங்கை அதிபர் ராஜ பக்சேவைக் கண்டித்தும், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

--