அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

சனி, 4 ஜனவரி, 2014

தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு : பட்டுக்கோட்டையில் த.மு.மு.க நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் !

தமுமுக மூத்த தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல்துறை துணை ஆய்வாளரை கண்டித்தும் அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 03-01-2014 அன்று மாலை 5 மணி அளவில் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் திருச்சி ரபீக் கண்டன உரை நிகழ்த்தினார். தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த த.மு.மு.க / ம.ம.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.






0 comments:

கருத்துரையிடுக

--