அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

புதன், 11 டிசம்பர், 2013

டிச,6 அன்று வாகனங்களை வழிமறித்து தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி த.மு.மு.க வின் கண்டன ஆர்ப்பாட்டம்!


தஞ்சை டிச.11 : தஞ்சையில் கடந்த டிசம்பர்,6 அன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக மதுக்கூரிலிருந்து பெண்கள் உட்பட சென்ற வாகனங்களை வழிமறித்து மதுக்கூர் அருகில் 6.பேர்கொண்ட காவிக் கும்பள் தாக்கியதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரியும் இன்று [ 11-12-2013 ] மதியம் 3.30 மணியளவில் தஞ்சை மணிக்கூண்டு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 1000க்கும் மேற்ப்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, வார்டு கிளை உருப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் சமுதாய உணர்வை வெளிபடுத்தினர்.

இந்த ஆர்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் சகோ.அப்துல் ஜப்பார், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சகோ. அதிரை அஹமது ஹாஜா, மாவட்ட பொருளாலர் சகோ. டாக்டர் சேக் அலாவுதீன், மமக மாவட்டச் செயலாளர் சகோ.அகமது கபீர், மாநில மனிதநேய வனிகர் சங்கச் செயலாளர் சகோ.தஞ்சை கலந்தர் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமுமுக-வின் மாநில பொதுச் செயலாளர் சகோ. காஞ்சி அப்துல் சமது, தமுமுக-வின் மாநில செயலாளர் சகோ.கோவை செய்யது, மமக-வின் மாநில அமைப்புச் செயலாளர் சகோ. ராவுத்தர்ஷா, தமுமுக-வின் மாநில மாணவர் அணிச் செயலாளர் சகோ. டாக்டர். சர்வத்காண் மற்றும் மாநில பேச்சாலர் சகோ. திருச்சி ரஃபிக் கண்டன உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக மாவட்ட செயலாளர் சகோ.அதிரை அகமது ஹாஜா அவர்கள் நன்றியுறை கூறினார்.

த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் 1300க்கும் மேற்ப்பட் பெண்கள் உட்பட பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, வார்டு கிளை உருப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் உணர்வுகளை வெளிபடுத்தினார்கள். 







0 comments:

கருத்துரையிடுக

--