அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

சனி, 7 டிசம்பர், 2013

தஞ்சை மணிக்கூண்டு அருகில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம். புகைப்படம் மற்றும் செய்தி



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச,6 அன்று மாலை 5 மணியளவில் தஞ்சை மணிக்கூண்டு அருகில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் சகோ.அப்துல் ஜப்பார், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சகோ. அதிரை அஹமது ஹாஜா, மமக மாவட்டச் செயலாளர் சகோ.அகமது கபீர் ஆகியோர் முன்னிலை

வகிக்க, மமக மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் கோவை சுல்தான் கண்டன உரை நிகழ்த்தினார்கள் நிறைவாக மாவட்ட பொருளாலர் சகோ.டாக்டர் சேக் அலாவுதீன் அவர்கள் நன்றியுறை நிகழ்த்த. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் 1300க்கும் மேற்ப்பட் பெண்கள் உட்பட பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, வார்டு கிளை உருப்பினர்கள்
கலந்துகொண்டு தங்களின் உணர்வுகளை வெளிபடுத்தினார்கள். கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்டம் கடுமையாக காணப்பட்டதால் அந்த வழியே செல்லும் வாகனங்களை மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

2,மணி நேரத்திற்க்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டம் நிறைவுற்றதும் கலந்துகொண்ட அனைத்து கிளையினரும் ஊர் போய் சேர போலீசார் பாதுகாப்புகளை வழங்கினார்கள்.











0 comments:

கருத்துரையிடுக

--