மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மது-மதுக் கடைகளுக்கு எதிரான தொடர் பரப்புரை டிசம்பர் 20 அன்று தொடங்கவிருக்கிறது. டிசம்பர் 20 தொடங்கி 30வரை நடைபெறும் இத்தொடர் பரப்புரையை முன்னிட்டு மதுவின் தீமையை விளக்கி நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை துண்டுப் பிரசுரம் வினியோகம், சுவரொட்டி மற்றும் சுவர் எழுத்து பரப்புரை, வாகனப் பரப்புரை, வீதிமுனைக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. இதன்மூலம் ஒரு கோடி மக்களிடம் மதுவின் தீமை குறித்தும் பூரண மதுவிலக்கின் அவசியம் குறித்தும் பரப்புரை செய்வது இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக டிசம்பர் 30 அன்று மதுபான ஆலைகள் மற்றும் மதுபான வினியோக மையங்களை, மக்களைத் திரட்டி, முற்றுகையிடும் அறப்போராட்டம் நடைபெற உள்ளது.
டிசம்பர் 20 அன்று இதன் தொடக்க நிகழ்ச்சியில் சென்னையில் தலைவர் ஜே.எஸ்.ரிபாயி அவர்களும், நாகப்பட்டிணத்தில் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி மற்றும் துணை பொதுச் செயலாளர் சரவண பாண்டியன் அவர்களும், சேலத்தில் தமுமுக பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது அவர்களும், நெல்லையில் மமக இணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது அவர்களும், திருச்சியில் தமுமுக துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனீபா அவர்களும் மண்டல வாரியாக தொடங்கி வைக்க உள்ளார்கள்.
இதில் வடசென்னையில் நடைபெறும் தொடக்க விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. ஆர்.நல்லக்கண்ணு அவர்களும், தென்சென்னையில் திரு. பழ.நெடுமாறன் அவர்களும் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.
புதன், 19 டிசம்பர், 2012
மதுவுக்கு எதிராக ஒரு கோடி மக்களிடம் பரப்புரை : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Labels
ஆம்புலன்ஸ்
(1)
ஆர்ப்பாட்டம்
(6)
இப்தார் நிகழ்ச்சி
(1)
இரத்ததான முகாம்
(2)
இலங்கை முஸ்லிம்கள்
(1)
இலவச கண் சிகிச்சை முகாம்
(3)
ஃபித்ரா
(2)
கிளைகள்
(5)
செயற்குழு
(1)
தஞ்சை(தெ)
(10)
தஞ்சை(தெ) டிச.6
(4)
தமுமுக
(39)
திருவையாறு ஒன்றியம்
(12)
பிப்ரவரி-8
(1)
புதிய கிளை
(1)
பொதுக்குழு
(1)
மதுக்கூர்
(6)
மமக
(25)
மயிலாடுதுறை தொகுதி
(1)
மறைவு
(1)
மனித நேய மக்கள் கட்சி
(10)
மாநில மாநாடு
(1)
முற்றுகை
(3)
வஃபாத் செய்தி.
(2)
வல்லம்
(1)
வாழ்த்துகள்
(3)
வேண்டுகோள்
(2)
ஜீலை6
(3)
IPP
(3)








0 comments:
கருத்துரையிடுக