அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

செவ்வாய், 8 ஜனவரி, 2013

07.01.2013 அன்று நடந்த தஞ்சை(தெ) மாவட்ட பொதுக்குழு புகைப்படங்கள்

07/01/2013 திங்கள் மாலை 6.30 மனிக்கு தஞ்சை(தெ) மாவட்ட பொதுக்குழு தஞ்சாவூர் மாஸ் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் K.ராவுத்தர்ஷா தலைமையேற்று வழி நடத்தினார்.


மாவட்ட அமைப்புக்குழு தலைவர் J. கலந்தர் கடந்த மாதங்களில் அமைப்புக்குழு ஆற்றிய பணிகளை வாசித்தார். அமைப்புக்குழு உறுப்பினர்கள் அஹமது கபீர், முஹம்மது ஹாரிஸ், ரியாஸ் அஹமது முன்னிலை வகித்தனர்.

ம.ம.க மாநில அமைப்புச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன் கிளைப்பொருப்பாளர்களின் கருத்துக்களைக் கேட்டு ஆய்வு செய்து உரையாற்றினார்.

த.மு.மு.க மாநில துனைத்தலைவர் குனங்குடி R.M. ஹனீபா இயக்கப் பொருப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விபரமாக எடுத்துரைத்தார். பிப்ரவரி இறுதிக்குள் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தலைவரின் ஒப்புதலோடு அறிவித்தார்..


மாநில தலைவர் J.S. ரிபாயி அவர்கள்  மாவட்ட,நகர,கிளை நிர்வாகிகள் உற்சாகம் பெறும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி, நமது இயக்கத்தின் தனித்தன்மைகள், சிறப்புகளால்தான் பொருப்புகள் இல்லாவிடினும் இதிலே தொடர்கிறார்கள் என்பதை விளக்கி நிறைவுரையாற்றினார்.


அமைப்புக்குழு உறுப்பினர் முஹம்மது புஹாரி நன்றியுரை ஆற்ற, துவாவுடன்
நிறைவு பெற்றது.









0 comments:

கருத்துரையிடுக

--