அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

தமுமுகவின் ஃபித்ரா : வேண்டுகோள்

http://www.orkutscrap4u.com/app/webroot/scrap/eid_ul_fitr/012-eid_ul_adha.gif 
நோன்பாளிகளின் குறைகளை சரிசெய்யவும், பெருநாள் நிகழ்வில் ஏழைகளையும் பங்கெடுக்கச் செய்யவும் ஃபித்ரா என்ற பெருநாள் தர்மம் செல்வந்தர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, பெருநாள் தேவைக்கு அதிகமாக உள்ள யாருமே ஃபித்ரா கொடுக்கலாம் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி, இன்று இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகள், ஜமாஅத்துகள், சங்கங்கள், நிறுவனங்கள் என்ற சமூகத்தின் அனைத்து தரப்பாரும் ஃபித்ராவை கூட்டாக சேகரித்து, விநியோகிக்கிறார்கள் என்றால் அதற்கு முன்னோடிகளாக செயல்பட்டது தமுமுகதான் என்பதை நாம் நன்றாக அறிவோம்.

ஒவ்வொரு வருடமும் தமுமுகவின் மாநிலத் தலைமையும், மாவட்ட நிர்வாகமும், கிளைக் கழகங்களும் இணைந்து கொடுக்கக்கூடிய ஃபித்ரா பொருட்களின் மதிப்பு கோடிகளைத் தொட்டிருக்கிறது. பல ஆயிரம் ஏழை உள்ளங்கள் ஆனந்தமடைந்திருக்கின்றன.

அதேபோல், இவ்வருடமும் ஃபித்ராவை கடந்த வருடங்களை விட அதிகமாகவும், அதிகம் பேர் பயனடையும் விதத்திலும் கொடுப்பதற்கு இப்போதிருந்தே தமுமுகவினர் செயல்பட வேண்டும் என தலைமை எதிர்பார்க்கிறது.
எனவே ஒவ்வொரு கிளையையும் உற்சாகப்படுத்தி, அந்தக் கிளைப் பகுதிகளில் ஏழைகள், வறியவர்கள் அனைவரும் பெருநாள் மகிழ்வில் முழுமையாகப் பங்கேற்கச் செய்ய, ஃபித்ராவைக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஃபித்ரா அரிசியை மட்டும் கொடுப்பதோடு நின்றுவிடாமல், அந்த நாளின் உணவுத் தேவையை நிறைவேற்றக்கூடிய அனைத்துப் பொருட்களையும் கொடுத்து மகிழ வேண்டும். இறையருளைப் பெறவும், கழகம் தனது வளர்ச்சிப் பணிகளில் இன்னும் சிறப்பாக செயல்படவும் இது உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

அந்தந்தப் பகுதிகளின் விலை நிலவரத்திற்கேற்ப ஃபித்ரா தொகையை முடிவு செய்யுங்கள். கழகத்தின் குடும்பத்தார்கள், பொதுமக்கள் அனைவரிடமும் ஃபித்ராவை சேகரியுங்கள். பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன்பாகவே ஃபித்ராவை விநியோகித்து விடுங்கள், என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

- தலைமையகம்.
Thanks: Makkal Urimai
Weekly
 தஞ்சை(தெ) மாவட்ட தொடர்புக்கு:-
சகோ. தஞ்சை அப்துல் ஜப்பார் - 9443264203
சகோ. வல்லம் அகமது கபீர் : 7708005173
சகோ. அதிரை ஹாஜா : 9003127748
 

0 comments:

கருத்துரையிடுக

--