அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

புதன், 6 மார்ச், 2013

தமுமுக கண்டியூர் கிளை நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்.





















அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-03-2013 ஞாயிற்றுக் கிழமையன்று தஞ்சை தெற்க்கு கண்டியூர் கிளை தமுமுக சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. மாவட்ட அமைப்புக் குழு தலைவர் சகோ.ஜெ.கலந்தர் தலைமையிலும், மாவட்ட அமைப்புக் குழு எ.முஹம்மது ஹாரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற இம்முகாமில் 20 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். 

நேரமின்மை காரணமாக நிர்வாகிகள் பலரும் இரத்தம் கொடுக்காமல், வந்திருந்த சகோதரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு A.முஹம்மது ஜமீல் கிளை தலைவர், M.ரியாஜ் மமக செயலாளர், N.நபில் அஹமது துனைத் தலைவர், T.ஹபிப் ரஹ்மான் (மாணவர் இந்தியா) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது மாற்றுமத சகோதரர்களும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெறுவதற்கு அனைத்து விதத்திலும் சிறப்பான ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருடைய நல்அமல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக என்று இந்நேரத்தில் பிரார்த்தனை செய்கிறோம்.

0 comments:

கருத்துரையிடுக

--