அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

உ.பி. மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தமுமுக தஞ்சை(தெ) மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் ஆர்பாட்டம் நடந்தது.



பட்டுக்கோட்டை, செப்.14: உ.பி.மாநிலம், முசப்பர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் கலவரத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தஞ்சை(தெ) மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

 வீரியத்தோடு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,  தமுமுக.வின் தஞ்சை(தெ) மாவட்ட தலைவர் சகோ.அப்து ஜப்பார் தலைமை தாங்கினார், தலைமைக்களக பேச்சாளர் சகோ.திருச்சி ரஃபிக் கண்டன உரை நிகழ்த்தினார், தமுமுக மாவட்ட செயலாளர் சகோ. அதிரை அஹ்மது ஹாஜா , மமக மாவட்ட செயலாளர் சகோ.வள்ளம் அஹ்மது கபீர், மற்றும் பட்டுக்கோட்டை நகர தமுமுக, மமக உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர், பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டதை ஆர்வத்தோடு செவிமடுத்தனர்...அல்ஹம்துலில்லாஹ்

0 comments:

கருத்துரையிடுக

--