வாருங்கள் நன்மையை நாடி என்ற தலைப்பில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு மதுக்கூரில் தமுமுகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) சார்பில் 25-05-2014 காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெற்றது. இதில் சிறுவர்களால் இறையச்சம் குறித்தான விழிப்புணர்வு நாடகமும், இஸ்லாமிய மார்க்க விளக்க பட்டிமன்றமும், மந்திரமா தந்திரமா மேஜிக் நிகழ்ச்சியும் முன்னதாக நடைபெற்றன. அடுத்த அமர்வில் குர்ஆன் கூறும் குடும்ப வாழ்க்கை இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ரப்பு, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும், சஹாபிய பெண்களின் வாழ்க்க வரலாறு, என பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளர் மவ்லவி மிஸ்பாஹூல் ஹூதா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். தமுமுக மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி, பிர்தவ்ஷியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவி முஹம்மது ரபீக் பிர்தவ்ஸி, மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி, மவ்லவி அன்சார் பிர்தவ்ஸி, தமுமுக மாநில பேச்சாளர் சகோ கோவை ஜாகிர், மதுரை ஆலிமா ஷல் ஷபில் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.
இம்மாநாட்டில் தலைசிறந்த கல்லூரிகளின் அரங்கங்கள், பல்வேறு தலைப்புகளில் மார்க்க அறிஞர்களின் நூல்கள், இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி, பேராசிரியர்களை கொண்டு மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு என பல சிறப்பம்சங்களும் இடம் பெற்றன.












0 comments:
கருத்துரையிடுக